நேரா content-க்கு போ

தனியுரிமை கொள்கை

tamilkotlinlab.com-க்கு பொருந்தும். கடைசியா update: 20 ஜூலை 2026.

என்னென்ன சேகரிக்கிறோம்

Form-ல நீங்க type பண்றது மட்டும் தான்: உங்க பேரு, email, phone number, இப்ப நீங்க எந்த level-ல இருக்கீங்கன்னு, அப்புறம் optional message. வேற எதுவும் இல்ல. இந்த site-ல analytics script, advertising pixel, third-party tracker எதுவுமே இல்ல.

அது எங்க போகுது

நீங்க form-ல கொடுக்குற விவரங்கள் ஒரு email-ஆ நேரா instructor-ஓட inbox-க்கு வரும். அவ்ளோதான் — தனியா database இல்ல, வேற எந்த service-க்கும் போகாது. அந்த mail Google-ஓட Gmail மூலமா அனுப்பப்பட்டு சேமிக்கப்படுது, அதனால Google அதை ஒரு service provider-ஆ, அவங்களோட privacy terms-படி handle பண்றாங்க.

எதுக்கு பயன்படுத்துறோம்

Android training program சம்பந்தமா உங்களை contact பண்றதுக்கு மட்டும் — call fix பண்றது, உங்க கேள்விக்கு பதில் சொல்றது. Newsletter அனுப்ப மாட்டோம். உங்க விவரங்களை யாருக்கும் விக்க மாட்டோம், வாடகைக்கு விட மாட்டோம், share பண்ண மாட்டோம்.

Cookies

இந்த site எந்த cookie-யும் set பண்றது இல்ல. Tracking-க்காக local storage-உம் பயன்படுத்தல.

எவ்ளோ நாள் வெச்சுக்குவோம்

நீங்க கேட்டுக்கிட்டா அப்புறமா follow up பண்றதுக்காக, enquiry mail-ஐ அதிகபட்சம் 24 மாசம் inbox-ல வெச்சுக்குவோம். அப்புறம் delete பண்ணிடுவோம்.

உங்க உரிமை

உங்களை பத்தி என்ன வெச்சிருக்கோம்னு கேட்கவோ, திருத்தவோ, delete பண்ணச் சொல்லவோ எப்ப வேணும்னாலும் venkat15.venkat15@gmail.com-க்கு mail பண்ணுங்க. Delete request-ஐ 30 நாள்ல செஞ்சிடுவோம்.